குடியாத்தத்தில் மழையின் காரணமாக வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிர் இழப்பு !
குடியாத்தம் , ஜூன் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகரம் 11/24 புது ஆலியார் இரண்டாவது தெருவில் வசித்து வரும் சலாவுதீன் மற்றும் ஹமிதா என்ற தம்பதியின் மகன் அபுநூஹான் (வயது -15 )என்பவர் இன்று 02.06.2026 காலை 10 மணி அளவில் அவருடைய வீட்டின் மேற் கூரை தொடர்ந்து பெய்து வரும் மழை யின் காரணமாக இடிந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் பாலாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
மேற்படி நபரின் உடலானது பிரேத பரிசோதனை செய்யும் பொருட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது மேற்படி நபர் 8ம் வகுப்பு வரை படித்து விட்டு இடை நின்றுள்ளார். மேற்படி நபருக்கு இரண்டு சகோதரிகள் இரண்டு சகோ தரர்கள் உள்ளனர். இதில் முதல் சகோதரி க்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார். விசாரணை செய்து வருகின்றனர
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக