ஜோதிலிங்கத்தை தரிசிக்க 14 மாநிலங் கள் வழியாக 114 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து 12 ஜோதி லிங்கத்தை தரிசித்த சிவன்பக்தர் !
நாட்றம்பள்ளி , ஜூன் 2 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு சிவன் பக்தரான இவர் 12 ஜோதிர்லிங்கத்தை தர்சிக்க இந்தியா முழுவதும் தொடங்கிய சைக்கிள் பயணம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர் நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிர தேசம், ராஜஸ்தான், உத்தர்பிரதேஷ், உத்தர்காண்ட், பீகார், ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங் கள் வழியாக சுமார் 114 நாட்கள் பயணம் செய்து 9000 க்கும் மேல் கிலோமீட்டர் தூரம் பயணித்து கிருஷ்ணேஷ்வர், பீமாஷங்கர், திரிம்பகேஷ்வர், சோம்நாத், நாகேஷ்வர், கேதார்நாத், மகாகாலேஷ் வர், ஓம்காரேஸ்வர், காசி, பைதிநாத், மல்லிகார்ஜுன், ராம்நாத் ராமேஷ்வர் ஆகிய 12 ஜோதிர்லிங்கங்களை வெற்றி கரமாகவும் மனநிறைவாகவும் தரிசனம் செய்து முடித்துள்ளார். அதனை தொடர் ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிவன்பக்தர் டெல்லிபாபு பேட்டி அளித்த துள்ளார்.மேலும் 12 ஜோதிர்லிங்கத்தை பார்ப்பதற்காக 14 மாநிலங்கள் வழியாக 114 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக