தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை யின் வழிகாட்டுதலின்படி, 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூன், 2026

தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை யின் வழிகாட்டுதலின்படி, 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை யின் வழிகாட்டுதலின்படி, 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு !
குடியாத்தம் , ஜூன் 2 -
வேலூர் மாவட்டம் குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 05.06. 2026 அன்று முதல் தொடங்க உள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு சுழற்சி I மற்றும் II சேர்க்கைக்கான 1,358 இடங்கள் உள்ளன. முதற்கட்ட கலந்தாய்வு கீழ் காணும் நாட்களில் துறைவாரியான நடைபெற உள்ளது.05.06.2026 : சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு  விளையாட்டு மற்றும் தேசிய படையில் சிறப்பிடம் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், படைவீர்கள் மற்றும் முன்னாள் இராணு வத்தினரின் வாரிசுதாரர்கள். 08.06.2026
இளங்கலைத் தமிழ் B.A. Tamil  Shift – I (T/M), ஆங்கிலம் B.A. English Shift – I – (E/M) 50 மதிப்பெண்கள் முதல் 100 மதிப் பெண்கள் வரை (சம்மந்தப்பட்ட  பாடப் பிரிவு தமிழ்/ஆங்கிலம்) பெற்றி ருக்க வேண்டும் மற்றும் B.Sc. Maths, Shift – I & II (T/M, E/M) (கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை)09.06.2026 : அனைத்து அறிவி யல் பாடப்பிரிவு  கட் ஆப் மதிப் பெண் 200 முதல் 400 வரைB.Sc. Physics , Shift – I (T/M, E/M), B.Sc. Chemistry, Shift – I & II (T/M, E/M),
B.Sc. Botany, Shift – I & II (T/M, E/M), B.Sc. Zoology, Shift – I (T/M, E/M), B.Sc. Computer Science Shift – I & II (E/M), BCA Shift – I & II (E/M)10.06.2026 : வணிகவியல் B.Com Shift - I, (E/M), Shift – II (T/M, E/M), மற்றும் வணிக நிர்வாகவியல் BBA Shift – I & II  (E/M) கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை 11.06.2026 : வரலாறு B.A., History - Shift – I (T/M) மற்றும் பொருளியல் B.A., Economics Shift – I & II (T/M, E/M),  கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 400 வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடம் தவிர்த்து பிற பாடங்களில் எடுத்துள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 200-க்கும் மேல் உள்ள மாணவர்கள் இக்கலந் தாய்வில் கலந்து கொள்ள தகுதி உடை யோர் ஆவர்.1. இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், 2. மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்/ 3. 10,  11, 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்  4. ஆதார் அட்டை
5. சாதி சான்றிதழ் 6. கடவுச்சீட்டு அளவு புகைப்படம் – 2 மேற்குறிப்பிட்ட ஆவணங் களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக்கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட் டின் மூலம் பின்பற்றி முறையாக நடை பெறும் என தெரிவிக்கலாகிறது.தகுதி மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவி யர் அசல் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பி த்து, சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி, கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad