புதிய மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் அலுவலர் சங்கம் வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

புதிய மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் அலுவலர் சங்கம் வாழ்த்து.

புதிய மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் அலுவலர் சங்கம் வாழ்த்து

இராமநாதபுரம், ஜூன் 4: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்களுக்கு தமிழ்நாடு வட்டாட்சியர் அலுவலர் சங்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சிவகுரு பிரபாகரனை சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிகுமார் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜமால்முகமது மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சியருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad