ஆதிதிராவிடர் இளைஞர்கள் மீது தாக்கு தல் - திமுக ஒன்றிய குழு தலைவர் N.E.சத்யானந்தம் SC/ST பிரிவின் கீழ் வழக்கு பதிவு !
வேலூர், பிப் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சார்ந்தவர் என் இ சத்யானந்தம், திமுக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக உள்ளார், மேலும் கடந்த முறை நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கொண்டசமுத்திரம் ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதரவோடு ஒன்றிய குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலை யில் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில், ஒப்பந்ததாரர் களிடம் 12 முதல் 18 சதவீதம் வரை கமிஷன் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் ஆன்லைன் டெண்டர் மூலம் பீம் ஜி நிறுவனத்தினர் கொண்ட சமுத்திரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டிடத்திற்கு டெண்டர் எடுத்துள்ளனர்.
இதற்கு கமிஷன் கேட்டு இதன் ஒப்பந் ததாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது
அதற்கு கமிஷன் பணம் தர மறுத்துள்ள னர், இதில் ஆத்திரம் அடைந்த ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் அரசுக்கு சொந்தமான வாகனத்தை கொண்டு சென்று அவரது ஆதரவாளர்களை காரில் ஏற்றி சென்று, கட்டிடப் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த இளைஞர் களை ஜாதிப் பெயரை சொல்லி அடித்து திட்டி வேலையை நிறுத்தியுள்ளார்.இதில் ஒரு இளைஞர் குடியாத்தம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர் மேலும் ஒப்பந்த நிறுவனம் கொடுத்த புகாரின் பெயரில் குடியாத்தம் டவுன் போலீசார் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் உள்ளிட்டோர் மீது எஸ்சி எஸ்டி பிரிவு உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து உள்ளனர்
மேலும் தலைமறைவாக உள்ள இவர் களைத் தேடி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக