தேசிய அறிவியல் நாள் நுண்ணறிவு உலகம் கருத்தரங்கம் கணித விஞ்ஞாணி ஆர்.ராமானுஜம் பங்கேற்பு !
வேலூர் , பிப் 28 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் டி.கே.எம் தன்னாட்சி மகளில் கல்லூரியும் இணைந்து தேசிய அறிவி யல் நாள் கருத்தரங்கம் இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி யில் கணித விஞ்ஞானி சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவனம் பேராசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில தலை வருமான பேராசிரியர் முனைவர் ஆர்.ராமானுஜம் பங்கேற்று அறிவியல் தொழில்நுட்பமும் செயற்கைநுண்ணறிவு உலகம் மக்களாட்சி ஒரு கணித அறிவி யல் சிந்தனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். பானுமதி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் த.மணிநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் மற்றும் கல்லூரி பேராசிரியர் டி.சசிகலா வர வேற்று பேசினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாநில குழு உறுப் பினர் கே.செந்தமிழ் செல்வன் முன்னாள் மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாவட்ட துணைத் தலைவர் எஸ்.குமரன் இணை செயலாளர் பி.சுகுமார் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் இல.சீனிவாசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.விஸ்வநாதன், பெ.ராமு கிளை நிர்வாகிகள் ஆர்.சுதாகர், அ.பாஸ்கர், நஸ்ரின் பானு, ஜெகன், பா.இராஜேந்திரன், பொன்.வள்ளுவன், ஆர்.வேல்முருகன், வெண்ணிலா, பி.ரவீந்திரன் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரி யை டி.சிலம்பரசி ஆகியோர் பங்கேற் றனர். கல்லூரியின் நிகழ்ச்சியினை அறி வியல் இயக்க கல்லூரி கிளை செயலா ளர் முனைவர் ரேகா ஒருங்கிணைத்தார்
தேசிய அறிவியல் தினத்தினை முன்னி ட்டு சர்.சி.வி.ராமன் முகமூடிகளை மாண வர்கள் அணிந்து கொண்டு அறிவியல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கருத்தரங்கில் சர்.சி.வி.ராமன் அவர் களின் அறிவியல் விளைவுகள் என்ற நூல் வெளியிட கல்லூரி செயலாளர் த.மணிநாதன் பெற்றுக்கொண்டார். மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப் பாளர் வேளாண் விஞ்ஞானி கு.செந் தமிழ்ச்செல்வன் அவர்களின் சேவை களை பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டார். தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை விஞ்ஞானி ஆர்.ராமானுஜம் வழங்கினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக