தாராபுரத்தில் 1.100 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

தாராபுரத்தில் 1.100 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.


தாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து மொத்தம் 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


இதையடுத்து போலீசார் கோகுல் (22), தந்தை பழனிசாமி, எலீஷ் நகர், சூர்யா மருத்துவமனை பின்புறம், தாராபுரம், பாலயுவராஜ் (22), தந்தை சுரேஷ்குமார், மேற்கு பஜனைமடை தெரு, தாராபுரம் மற்றும் பிரபு (20), தந்தை வேல்முருகன், 2-வது தெரு, கொள்பட்டி, மணக்கடவு, தாராபுரம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.100 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad