கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி அகச் சுரப்பியல் நீரழிவு மற்றும் வளர்ச்சி மாற்ற துறை சார்பில் WORLD DIABETES DAY 2025 -26 !
வேலூர் மார்ச் 14 -
வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர் நிறுவனத்தின் அகச் சுரப்பியல் நீரழிவு மற்றும் வளர்ச்சி மாற்றத் துறை சார்பில் WORLD DIABETES DAY 2025 26 காண நிகழ்வின் நிறைவு விழா இன்று ஹோட்டல் டார்லிங் ரெசி டென்சி மாலை 5 மணிக்கு தொடங்கப் பட்டது இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .
இந்த நிகழ்ச்சியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் நிறை வை குறிக்கும் வகையில் அமைந்தது இந்த ஆண்டின் கருப்பொருள் நீரழிவு நோய் மற்றும் மூளையும் ஆகும் இது நீரிழிவு நோய் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கங்களை குறிப்பாக நினை வாற்றல் மனநலம் மற்றும் நரம்பியல் சிக்கல்களின் அபாயம் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் தேர்வு செய்யப் பட்டது இந்த முயற்சி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நோய் தடுப்பு ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் சரியான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கிய மான வாழ்க்கை முறைகளை பற்றி விழிப் புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிறைவு விழாவிற்கு வைராலஜி துறையைச் சேர்ந்த டாக்டர் ஜேக்கப் ஜான் அவர்கள் முதன்மை விருந் தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் .விழிப்புணர்வு இயக்கத் தின் ஒரு பகுதி யாக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்காக சமையல் போட்டி வினாடி வினா போஸ்டர் வழங்கல் ஓவிய போட்டி மற்றும் கருப்பொருள் அடிப்படை யிலான காலச்சக்கர நிகழ்வுகள்உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன அவற்றில் கருப்பொருள் அடிப்படையிலான நடன போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களின் உற்சாகமான பங்கேற்பை பெற் றது. இந்த நடனங்கள் நீரழிவு விழிப்பு ணர்வு மற்றும் மூளை ஆரோக்கியம் பற்றிய செய்திகளை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தின கருப்பொருள் அடிப் படையிலான நடன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் கனக லட்சுமி சமூக மருத்துவ பேராசிரியர் கிறிஸ்துவ மருத்துவ கல் லூரி டாக்டர் கொண்டூரு வித்யா இணை பேராசிரியர் மற்றும் செயல் துறை தலைவர் கழுத்து அறுவை சிகிச்சை துறை டாக்டர் புஷ்கர் சர்மா உதவி பேரா சிரியர் எண்டோகிரைன் அறுவை சிகிச் சை துறை டாக்டர் நிம்மி தாஸ் கண் மருத்துவர் டாக்டர் அபிராமி இயற்கை மருத்துவர் மேரி சுஜாதா தொழில் முறை இசை மற்றும் நடன ஆசிரியர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர் நிறுவனத்தின் அகச்சுரப்பியல் நீரிழிவு மற்றும் வளர்ச்சி மாற்றத் துறை சார்பில் உலக நீரழிவு மற்றும் மூளையும் தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வெற்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் இளைஞர்களை ஆரோக் கிய கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கையில் படைப்பாற்றல் மற்றும் கல்வி தளங்கள் மூலம் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது
நடைபெற்ற போட்டிகளிலும் முதல் பரிசு லட்சுமி கார்டன் பள்ளி வேலூர் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பாக தொடர்ந்து 5 வருடங்களாக பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியின் முடிவில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர் செவிலியர் சிறப்பு அழைப் பாளர்களுக்கும் டாக்டர் நிகால் தாமஸ் மூத்த பேராசிரியர் . அகச் சுரப்பியில் நீரழிவு மற்றும் வளர்ச்சி மாற்று துறை கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி சார்பில் நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக