குடியாத்தத்தில் 6 இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் அதிரடியாக கைது !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர போலீசார் கார்த்திகேயபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர் வந்ததை போலீசார் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டார்கள் அப்போது அவர்கள் முன்னுக் குப் பின் பதிலளித்ததால் அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை செய்தார்கள் விசாரணையில் வாணியம் பாடி அடுத்தநேருஜி நகர் பகுதியை சார்ந்த சுனில் வயது 19 ஈச்சங்கல் பகுதி யை சேர்ந்த அன்பழகன் (வயது 20) என்பதும் இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வண்டி என்றும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்டு விசாரணையில் இவர்கள் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன. திருட்டில் ஈடுபட்டதும் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை வாணியம்பாடி பாலாற்றங்கரை பகுதி யில் உள்ள . பழுதடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்
இதையெடுத்து. போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பழுதடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த .5.. இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் இது சம்பந்தமாக உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து உள்ளனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக