இவ் விழாவில் பிரதம பேராயரின் ஆணையாளர் P.ஐசக் வரப்பிரசாத் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்தார்கள்..
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் ரூபன் மார்க் ஜெபித்து ஆசிர்வதித்து, கல்வெட்டினை திறந்து வைத்து தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் P. மோசஸ் ஜெபராஜ், லேசெயலாளர் உயர்திரு எஸ் டி கே ராஜன், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி நிலைவர குழு செயலர் J.ஜெபச்சந்திரன், குருத்துவ செயலாளர் D. G. S தாமஸ், திருமண்டல பொருளாளர் D. K. M ஜாண்சன், நாசரேத் சேகர கமிட்டி தலைவர் J. அல்பர்ட் ஜெய்சிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் S. மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர். S. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், குருவானவர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர் உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா முடிவில் பேராசிரியர் சாம் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் S. மாமல்லன் அறிவுறுத்தலின்படி கல்லூரி முதல்வர் முனைவர் S. ஜெயக்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக