கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்ட “173(2) FIR உங்கள் உரிமை” திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1914 புகார்தாரர்களுக்கு இலவசமாக FIR நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊர்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் மூலம், புகார்தாரர்களின் இல்லங்களுக்கே சென்று FIR நகல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பொதுமக்களின் சட்ட உரிமை உறுதி செய்யப்பட்டதுடன், காவல்துறையின் மீது மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக