அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் !. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் !.

 அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் !. 
ஆம்பூர் பிப்.22- 
                   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் வீட்டில் அனும தியின்றி நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திரு ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாக லிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டை யாட தயாரித்து பதுக்கி வைத்திருந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த சத்தியநாதன் (வயது 32)  என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad