பாளையங்கோட்டை கேடிசி நகர் ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

பாளையங்கோட்டை கேடிசி நகர் ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.

பாளையங்கோட்டை கேடிசி நகர் ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா 

ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பள்ளி மாணவி முத்துலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார் 

மாணவிகள் மகாலட்சுமி ஆதி தனலட்சுமி குருமுத்துசெல்வி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர். 

விழாவிற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வசந்தாரூபிஜேம்ஸ் மற்றும் பள்ளி தாளாளர் டாக்டர் ஜான்சன்ராஜா ஆகியோர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

சிறப்பு விருந்தினராக காவல்துறை ஆய்வாளர் முத்து கணேஷ், டாக்டர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பள்ளி முதல்வர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி முதுநிலை தமிழாசிரியர் ஜோசப் பள்ளியின் பெருமைகள் பற்றி கவிதையாக வாசித்தார். 

விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,வருகை பதிவேட்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பரிசுகள் கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டது. 

விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த ஆசிரியர்களுக்கான விருது கணித ஆசிரியர் அமுதா பெற்று கொண்டார். 

சிறந்த பணிக்கான விருது பள்ளி முதல்வர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக மாணவி ஐஸ்வர்யா நன்றி உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை மற்றும் இ சி ஏ கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad