விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி 5 பேர் பலி.

பிப்.15, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாக்குளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குருசாமி(40). இவர் குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தார். தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஒரு பெண் நியமித்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை குருசாமி, தனது சகோதரர் முனியசாமி மகன்கள் முகிலரசன்(5), சுமித்ரன்(3), சகோதரியான தங்கவேல் மனைவி முத்துலட்சுமி(48) மற்றும் வேலைக்கு நியமித்த பெண் என 5 பேர் ஒரே பைக்கில் குளத்தூரில் இருந்து பல்லாக்குளத்துக்கு சென்றனர். 

கிழக்கு கடற்கரை சாலையில் வைப்பார் அருகே சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா வேனும், பைக்கும் மோதின. இதில் குருசாமி உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad