காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு !
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயண திருமண மண்டபத்தில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தலைவர் எ.செந்தில்குமார், அவர்களின் ஒப்புதலுடன் துணைத்தலைவர் வழற்கறி ஞர் வி.பாரிவள்ளல், மாவட்ட மேலாண் மைக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. காட்பாடி கிளையின் மேலாண் மைக்குழு உறுப்பினர்களாக செ.நா.ஜனா ர்த்தனன், எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.விஜய குமாரி, வி.பழனி, என்.தங்கவேல், டி.லிவி ங்ஸ்டன் மோசஸ், எம்.திலகர், என் .பிர காஷ், டாக்டர் வீ.தீனபந்து, எல்.ரவிச் சந்திரன், எ.ஆனந்தகுமார், எஸ்.ரமேஷ் குமார்ஜெயின், ஜெ.குமரவேல், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.செல்வமணி, கே.குணசேகரன், ஆர்.சுதாகர், எஸ்.அருள் சுடர், வி.ஆறுமுகம், ஆர்.லட்சுமிநாராய ணன், ஆகியோர் ஒரு மனதாக தேர்தெடு க்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற மேலா ண்மைக்குழு கூட்டத்தில் அவைத்தலை வராக முனைவர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளராக எஸ்.எஸ்.சிவவடிவு, அவை துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக வி.பழனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத்தலைவர் வி.பாரிவள்ளல், ஆர்.சீனிவாசன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயலாற்றி தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனனிடம் வழங்கினர்.
காட்பாடி கிளையின் சார்பில் இரத்த பரிசோதனை நிலையம் மீண்டும் தொடங்க உரிய முயற்சிகள் மேற்கொள் வது, மினி ஆம்புலன்ஸ் சேவை தொடங் குவது மற்றும் சிறுநீரக டயலிஸ் மையம் அமைப்பதற்கான சாத்ய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக