விவசாயிகள் வியாபாரத்தை புறக்கணி த்து சாலையில் காய்கறிகளைக் கொட்டி மறியல் போராட்டம் !
வாணியம்பாடி , பிப் 20 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பாதையை தினசரி காய் கறி வியாபாரிகள் ஆக்ரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால் உழவர் சந்தை விவசாயிகள் வியாபாரத்தை புறக்கணித்து சாலையில் காய்கறி களைக் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச் சந்தை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. அதன் அருகில் தினசரி காய்கறி வியாபாரிகளுக்கான மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரூபாய் 4.5 கோடி செலவில் காய்கறி வியாபாரி களுக்காக புதிய கடைகள் கட்டி முடிக் கப்பட்டு அதில் தினசரி காய்கறி வியா பாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் வியாபாரிகள் சாலையோரங்களில் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களுக்கு சரியாக வியாபாரம் நடை பெறவில்லை எனக் கூறி உழவர் சந்தை க்கு செல்லும் வழியில் தினசரி காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தை க்கு வரும் விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை கொண்டு செல்ல வழி இல்லாமல் தங்களுடைய பாதையை தினசரி காய்கறி வியாபாரிகள் ஆக்ர மிப்பு செய்துள்ளதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் உழவர் சந்தை முன்பாக காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நகராட்சி சார்பாக உழவர் சந்தை யில் உள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்ற முன்வருவதில்லை எனவும் இதனால் உழவர் சந்தைக்கு உள்ளே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும், உழவர் சந்தைக்கு செல்லும் பாதையில் உள்ள தினசரி காய்கறி கடைகளை அகற்றி தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் துறை யினர், மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் சந்தை விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.மேலும் பேச்சு வார்த்தை நடத்த வந்த நகராட்சி ஆணையாளர் ரகுராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர் அப்துல் ரஹீம் ஆகியோரை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக