வெள்ளி நகைகளை கத்தியை காட்டி நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது !
திருப்பத்தூர் ,பிப்.20-
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி நகைகடை பஜாரில் நகைகடைகளுக்கு கடந்த 17 ஆம் தேதி ஆற்காடு பகுதியை சேர்ந்த தீபக் என்ற நகை வியாபாரி 100 கிலோவிற்கும் மேற்பட்ட வெள்ளிநகைக ளை காரில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது காரை அம்பூர் பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றின் அருகே நிறுத்தி வைத்திருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் தீபக் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கத்தியை காட்டி ரூபாய் 95 லட்சம் மதிப்பிலான (38.50 கிலோ) வெள்ளி நகைகளை கொள் ளையடித்து சென்றனர்.சம்பவம் குறித்து தீபக் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து தீபக் மற்றும் அவருடன் வந்த நபர்கள் மற்றும் வாணியம்பாடியில் விற்பனை செய்த நகைகடை உரிமையாளர்களிடம், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி களையும், செல்போன் நெட்வெர்க்களை யும் ஆய்வு செய்தனர்.சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சியாமளா தேவி தலைமை யிலான, தனிப்படை போலீசார் மற்றும் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற் கொண்டதில் வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகன் நரசிம்மன் அமல் ராஜ், மற்றும் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரியை சேர்ந்த மணி ஆகியோ ருடன் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுப் பட்டது தெரியவந்துள்ளது.மேலும் கைது செய்த மணி தனது வீட்டின் கழிவறை தொட்டி மற்றும் சாணி குவியிலில் மறைத்து வைத்த 38.50 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரை நகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக