சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடக்கம்!

சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்   வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடக்கம்!
வேலுர்,பிப் 20 -
 வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டாரத் தில் சமூக வளர்ச்சி குறியீடுகளை பூர்த்தி செய்வதற்கான சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் இன்று (20.02.2026) கீ.வ.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்து, திட்டம் குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் மற்றும் சம்பூர்ணதா அபியான் திட்ட தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப் பாளர் பிரதீப், கீ.வ குப்பம்ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர்  யுவராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  திரு மால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  அசோக் குமார். ஒன்றியக்குழு உறுப்பி னர் சீதாராமன், வட்டார வளர்ச்சி அலு வலர்  வேலு, சம்பூர்ணதா அபியான் திட்ட கீ.வ குப்பம் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி ஸ்வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad