மனசாட்சி இல்லாத மாமன்ற உறுப்பினர் பிரபல துளி கடைக்கு துணை போகும் அவலம் பொதுமக்கள் அவதி !
வேலூர் , ஜன 8 -
வேலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் அவர்கள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டு ஆலோசனை செய்தார் வேலூர் ஈ-வது வார்டில் பச்சை யப்பா துணிக்கடை விவகாரம் அடிப்படை வசதிகள் மறுப்பு மக்கள் கடும் அவதி வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி -வது வார்டு பகுதியில் பிரபலமான பச்சையப்பா துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு போதிய பார்க்கிங்வசதி இல்லாததால், கடைக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, பச்சையப்பா துணிக் பச்சையப்பா துணிக்கடையின் பின்புறத்தில் வரும் சுமார் 200-க்கும் டும்பங்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வசித்தது வரும் குடும்பங்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை கடை நிர்வாகம் குறிவைத் ததாக கூறப்படுகிறது. பார்க்கிங் வசதி ஏற்படுத்தும் நோக்கில், அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை அதிக
விலை கொடுத்து பச்சையப்பா நிறுவனத் தினர் வாங்கியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.ஆனால், மீதமுள்ள 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை விற்க மறுத்துள்ள நிலையில்,
அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினர், பச்சையப்பா நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகை பணம் பெற்றுக் கொண்டு, வீடுகளை விற்குமாறு அழுத்தம் கொடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் இதன் தொடர்ச்சி யாக, கடந்த பல நாட்களாக அந்த பகுதி யில் குப்பை சேகரிக்க ஊழியர்கள் அனுப் பப்படாமல் கழிவுநீர் கால்வாய் அடைப்பு சரி செய்யப்படாமல் சுகாதார பணிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பகுதி முழுவதும் குப்பை குளமாகவும், கடும் சுகாதார கேடான சூழலிலும் காணப்படு வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தாலும், அவர் மக்களின் குறை களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிறார் என்றும், திட்டமிட்ட வகையில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக வும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அரசியல் அழுத்தமின்றி தனியார் நிறுவனங் களின் தலையீடு இல்லாமல் அப்பகுதி யில் அனைத்து அடிப்படை வசதிகளை யும் வழங்க நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாலா குண்டா பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக