நாட்றம்பள்ளி அருகே வீட்டின் அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டுவது தொடர் பாக கேட்க சென்ற பெண்ணை தாக்கி நபர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டுவது தொடர் பாக கேட்க சென்ற பெண்ணை தாக்கி நபர்!

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டுவது தொடர் பாக கேட்க சென்ற பெண்ணை தாக்கி நபர்!
நாட்றம்பள்ளி  ஜனவரி 7 -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டின் அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டுவது தொடர்பாக கேட்க சென்ற பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலை யத்தில் புகார். நாட்றம்பள்ளி அடுத்த பணியாண்டபள்ளி வேப்பல்நத்தம் அருகே முனியூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர். இவர் மருத்துவம் பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இவர் வீட்டின் அருகே யுவராஜ் வனரோஜா குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். யுவராஜின் வீட்டின் அருகே  மருத்துவர் பன்னீர் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி வனரோஜா மருத்துவர் பன்னீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போதுஆத்திரமடைந்த பன்னீர் வனரோஜாவை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படும் நிலையில் அதனை தடுக்க சென்ற அவருடைய கணவர் யுவராஜுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த வனரோஜாவை சிகிச்சைக்காக நாட்றம் பள்ளி அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றுள்ளனர்.மேலும் வன ரோஜாவை அடித்ததாக கூறப்படும் மருத்துவர் பன்னீர் காயம் ஏற்பட்டதாக கூறி நாட்றம் பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை. செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad