மதுபோதையில், தூத்துக்குடி to நாசரேத் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

மதுபோதையில், தூத்துக்குடி to நாசரேத் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர்.

மதுபோதையில், தூத்துக்குடி to நாசரேத் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் 

ஜன. 20- தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, நாசரேத் நோக்கி சென்ற அரசு பேருந்தை தற்காலிக டிரைவரான புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) என்பவர் இயக்கிச் சென்றார். 

பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். முத்தையாபுரம் அருகே வந்தபோது பேருந்து தாறுமாறாக சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது டிரைவர் ரமேஷ், மது போதையில் இருப்பது தெரியவந்தது. 

உடனே போலீசார் டிரைவரை கைது செய்தனர். பின்னர் மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட டிரைவர் மாலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad