இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 140 கிலோ அளவுள்ள கஞ்சா மூடைகளை இராமநாதபுரம் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 140 கிலோ அளவுள்ள கஞ்சா மூடைகளை இராமநாதபுரம் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 140 கிலோ அளவுள்ள கஞ்சா மூடைகளை இராமநாதபுரம் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருபுலாணி அருகே உள்ள களிமண்குண்டு கடற்கரை பகுதியில் 140 கிலோ அளவுள்ள கஞ்சா மூடையை இலங்கைக்கு கடத்தி செல்ல வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி 

இராமநாதபுரம் மாவட்ட சுங்க இலாக துணை கமிஷனர் பிரகாஷ் உத்தரவின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் பாபு ராவ் தலைமையில் அப்பகுதிக்கு சென்று இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மூடைகளை கைப்பற்றினர். 

கடத்தி செல்ல இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றவர்களை காவல்துறையினர்.தேடி வருகின்றனர்.

செய்திகள் 
செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad