நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் உயர் திருத்தல பெருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் உயர் திருத்தல பெருவிழா.

நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் உயர் திருத்தல பெருவிழா.

வரும் 20.1.2026 செவ்வாய்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெருவிழா நாட்களில் தினமும் நவனாள் திருப்பலி நடைபெறுகிறது. 

வரும் 30.1.2026 வெள்ளிக்கிழமை 11 ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு அருட்பணி இன்பென்ட் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் அதனை தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு கோடி அற்புதர் அந்தோணியார் சப்பர பவனி சிறப்பாக நடைபெறும். 

31.1.2026 சனிக்கிழமை அன்று மாலை ஆராதனை அதனை தொடர்ந்து 1.2.2026 ஞாயிற்றுகிழமை தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி சிறப்பாக நடைபெறுகிறது. 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பிகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல தந்தையர், அருட்சகோதரிகள், நிதிக்குழுவினர் மற்றும் உவரி இறைமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad