தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தின் சார்பாக 161வது ஆண்டாக அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக நயினாருக்கு சண்முக அர்ச்சனையும், சிவக்கொழுந்தீஸ்வரர் சமேத ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளுக்கு தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜையும், தீப விழாவும் நேற்று நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தில் இருந்து அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக நயினாருக்கு சண்முக அர்ச்சனை செய்து வழிபடுதல் நடந்தது.
தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு சிவக்கொழுந்தீஸ்வரர் சமேத ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜையை சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இரவு 7.30மணிக்கு கோவில் வளாகத்தில் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் ,இளைஞர் பேரவை, வேளாளர் வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக