வேலூர் மாவட்ட காவல் துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்தும் கையுந்து பந்து போட்டி !
வேலூர் , ஜன 19 -
வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப் பாளர் ஆ.மயில்வாகனன், தலைமையில், இன்று 19.01.2026-ம் தேதி மாவட்ட காவல் துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்தும் கையுந்து பந்து போட்டி வேலூர் நோதஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளரால் துவக்கப்பட்டு 2 நாட்கள் கையுந்து பந்து விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி பகல், இரவு மின்னொளி போட்டியாக நடக்க இருக்கிறது. விளை யாட்டு போட்டியில் ஆர்வம் உள்ள 30-ற்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெறு கிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக் கும் விதமாக காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப் படும். இப்போட்டியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S.பாஸ்கரன் (தலை மையிடம்) மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் B.S. தனுஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக