திருப்பத்தூரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் !
திருப்பத்தூர் ,ஜன 20 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பிராதன சாலையில் முன் னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு மா பெரும் பொதுக்கூட்டம் அதிமுக நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து எம்ஜிஆர் குறித்து சிறப்புரையாற்றினார்.
உடன் இந்த பொதுகூட்டத்தின் போது வாணியாம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள்
டாக்டர் திருப்பதி,சங்கர், செல்வம், ரமேஷ், மணிகண்டன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக