தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற கோரி சத்துணவு ஊழியர்கள் 700 பேர் மறியல் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜனவரி, 2026

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற கோரி சத்துணவு ஊழியர்கள் 700 பேர் மறியல் கைது !

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற கோரி சத்துணவு ஊழியர்கள் 700 பேர் மறியல் கைது !
வேலூர் ,ஜன 20 -

                   வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் 2021ஆம் ஆண்டின் சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதி அறிக்கை வரிசை எண்.313இல் குறிப்பிட்டுள்ள வாறு சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் பணிக்கொடை சத்து ணவு அமைப்பாளர்களுக்கு 5 இலட்சமும் சத்துணவு சமையலர் மற்றும் உதவி யாளர்களக்கு 3 இலட்சமும் வழங்கிட கோருதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்க சங்கத்தின் சார்பில் (Tamilnadu Noon Meal EmployeesAssociation) மாநிலம் தழுவிய அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டமும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலை வர் எம்.ஏழுமலை தலைமை தாங்கினார்.  சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் கே.ருக்குமணி வர வேற்று பேசினார்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.கிரூஷ்ண மூர்த்தி தொடக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில் உயர் மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த் தனன், வேலூர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மற்றும் தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க மாநில செயல் தலைவர் எம்.ஜெயகாந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எ.மரகம் துணைத்தலைவர்கள்எஸ்.வி.தமிழ்ச்செல்வி, ஆர்.சசிகலா, பி.சபிக் அகமது, இணைச்செயலராளர்கள் சி.மகாலிட்சுமி, நிர்மலா, மகேஸ்வரி, புவனேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் கே.கனக வல்லி நிறைவுரையாற்றினார்.  மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமி நன்றி கூறினார்.மறியல் செய்த சுமார் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துள்ளர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad