கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் அருகில் உள்ள வேகாக்கொல்லை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ களப்பாள வீரட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோயிலில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் இந்த கோயிலுக்கு வந்து தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் செய்கிறார்கள். குறிப்பாக "மாசி மகம் மற்றும் இங்கு ஒரு பிரபலமான நிகழ்ச்சி.
இந்த கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 8-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் கொடிமர பிரதிஷ்டை சடங்குகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், என்எல்சி செயல் இயக்குனர் அசோக் கோட்டால, என்எல்சி போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் அருளழகன், வேகாக்கொல்லை அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் பன்னீர் செல்வம், ராதாக ராதாகிருஷ்ணன் துரைமுருகன் சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக