அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலியில் இரத்ததான முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலியில் இரத்ததான முகாம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் அதிமுக கழக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.


கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் இரத்ததான முகாம் நடத்தபட்டது. இந்த முகாமில் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாருமான சொரத்தூர் இராஜேந்திரன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.


இந்த இரத்ததான முகாமில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகர், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப  செயலாளர் இராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் திருமலைவாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ், பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல், நெய்வேலி நகரசெயலாளர் கோவிந்தராஜ், வடலூர் நகர செயலாளர் சி.எஸ் பாபு, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஆனந்தபாஸ்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad