நெல்லை மாநகர் பேட்டையில் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லுரி வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

நெல்லை மாநகர் பேட்டையில் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லுரி வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு.

நெல்லை மாநகர் பேட்டையில் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லுரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 1997 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக "Alumni Meet 25" வெள்ளி விழா நடைபெற்றது. 

இந்தக் கல்லூரியில் 25 ஆண்டுகள் முன் தன்னுடன் படித்த சக மாணவர்களான நண்பர்களையும், கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் ஒருசேர கண்டு மகிழ்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக அமைந்ததில் அனைவருக்கும் இனிப்பான சந்திப்பாக அமைந்தது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பெங்களூர் டெல்லி என மற்ற மாநிலங்களில் இருந்தும், இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். 

அன்றைய மாணவர்கள் இன்று தொழிலதிபர்களாகவும், அதே கல்லூரி பேராசிரியராகவும் இதே மாவட்டத்தில் வட்டாட்சியர் ஆகவும் என பல துறைகளில் தடம் பதித்த மாணவர்களின் சங்கமமாக அமைந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்கள் ஒருவருக்கொருவர் இணைந்தும் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களுடன் குழுவாகவும் ஆகச்சிறந்த நினைவாக இன்றைய நிகழ்வை புகைப்படமாக பதிவு செய்து தங்களது செல்போன்களில் சேமித்துக் கொண்டனர்.

மாணவர்கள் நினைவுகளை பகிர்ந்து நேரத்தில் ஆசிரியர்கள் பகிர்ந்த நினைவுகளும், அறிவுரைகளும் ஆசிரியர் பணி அறப்பணி என வாழும் ஒவ்வொரு ஆசிரியரும், கல்லூரியை பொருத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் மற்றொரு தந்தை தான் என்பதை அனைத்தும் விதமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad