தனியார் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா போதை மாத்திரைகள் மில்லி கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் !
காட்பாடி ,ஜன 21-
விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது !
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விஐடி (VIT) பல்கலைக்கழகத்தை ஒட்டிய பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக, ரகசிய தகவல் உடனடியாக காட்பாடி பிரம்மபுர காவல் நிலைய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் பிரம்மபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ‘கிளவுட் அப்பார்ட்மெண்ட்’ என்ற தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி, பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண் காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாரு க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிகளில் திடீர் சோதனை மேற் கொண்டனர். இந்தச் சோதனையில் மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்து, 500 கிராம் கஞ்சா, 53 போதை மாத்திரைகள்,250 மில்லி கஞ்சா ஆயில்
ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக விஐடி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஆயுஷ் சுக்லா (வயது 21) மீரட், உத்தரப் பிரதேசம் கேசவ் (வயது21) பிவானா, ஹரியானா தேவ் சிங் (வயது 21) காசியாபாத், உத்தரப் பிரதேசம் ஈஸ்வர் சரண் (வயது 21) கொண்டாப் பூர், ஹைதராபாத்ஆதர்ஷ் (வயது 21) கிரேட்டர் நோய்டா, உத்தரப் பிரதேசம்
ஆதித்ய பிரதான் (வயது 21) வைபவ் நகர், காட்பாடி ஷிபான் (வயது 21) செல்வம் நகர், காட்பாடி ஆகியோரை கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act 8(c), 20(b)(ii) (B)) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS – 111, 123) ஆகிய பிரிவுகளின் கீழ் பிரம்மபுரம் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார் (Cr.No.09/26) கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் மேலும் 4 மாணவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் தனியார் விடுதி களில் மேற்கொள்ளப்பட்ட இந்த கஞ்சா வேட்டை, வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக