மணல் ஏற்றிச் செல்லும் லாரி அதிவேகம் பொது மக்கள் உயிர் பயம் அச்சத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார் களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு !
வேலூர் ,ஜன 21 -
வேலூர் மாவட்டம் அமர்தி வனவிலங்கு காப்பகம் செல்லும் சாலையில், மலை மண் ஏற்றிச் செல்லும் கனரக டிப்பர் லாரிகள் அதிக அளவில் அதிவேகமாக இயக்கப்படுவதால், அந்த வழியாக செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் உயிர் அச்சத்தில் பயணித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறுகிய மற்றும் வளைவுகள் நிறைந்த இந்த மலைச் சாலையில், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் பயணித்து வரும் நிலையில், வேகக் கட்டுப்பாடின்றி செல்லும் கனரக லாரிகள் அடிக்கடி விபத் துகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் போது நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்ற னர். இதனால், சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து,
கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப் பாடு விதிக்கவும்,வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகள் அமைக்கவும்,
போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்கவும்,
சட்டவிரோத மண் கடத்தலை முற்றிலும் தடுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக