வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 14 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி வந்த இளைஞர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 ஜனவரி, 2026

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 14 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி வந்த இளைஞர் கைது !

வாணியம்பாடி அருகே மூதாட்டி  கொலை வழக்கில் 14 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி வந்த இளைஞர் கைது !
மொபைல் லோன் கட்டுவ தற்காக கொலை செய்து நகைகளை திருடியதாக கைதான இளைஞர் போலீசாரிடம் பர பரப்பு வாக்குமூலம்.

வாணியம்பாடி, ஜன.21-

      திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி பவுனம்மாள் (வயது 65). இவரது கணவர் உயிரிழந்த நிலையில்,  இவரது  இரு பிள்ளைகளும், திருமணம் ஆகி  வெளி யூரில் வசித்து வரும் நிலையில், மூதாட்டி அதே பகுதியில் தனிமையில் வசித்து புத்து கோவில் சுங்கச்சாவடி அருகே ஏரிக் கரையோரம் சாராய விற்பனையில் ஈடு பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை  ஒட்டி உள்ள ஏரிக்கரை யோம், உள்ள தனது மாட்டுக் கொட்டை கையிற்கு மூதாட்டி சென்றுள்ளார், அப் போது மாட்டு கொட்டகைக்கு வந்த மர்ம நபர் மூதாட்டியை கொடூரமாக தாக்கி துணியால் கழுத்தை நெறித்து, கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையைச் கொள்ளை யடித்துக் கொண்டு சென்றுள்ளார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்ற அம்பலூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்  சியாமளாதேவி கொலை சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து, மூதாட்டி யின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  வேலூரில் இருந்து மோப்பநாய் சாராவை வர வழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப் படுத்தினர். இருந்த போதிலும் அதில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக காவல்துறையினர் பல்வேறு கோணங் களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முருகன் (வயது 22), என்பவரிடம் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண் டனர்.பின்னர் அவருடைய  செல் போன் நம்பரை ஆய்வு செய்தபோது அவர் தனியார் கோல்ட் பைனான்ஸ் நிறுவனத் தில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் மீண்டும் அவரை நேற்று அழைத்து வந்து போலீசார் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில்.அவர் மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் அவர் அளித்த வாக்கு மூலத்தில் முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் மொபைல் ஆப் மூலமாக 5 க்கும் மேற்பட்ட லோன்களை பெற்றதாக வும், அதனை கட்டுவதற்காக பல இடங்க ளில் பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணம் கிடைக்காத நிலையில்  மூதாட்டி அணிந்திருந்த நகையை பறிப்பதற்காக மூதாட்டியை தொடர்ந்து சென்று மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட மூதாட்டி கூச்சலிட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் மூதாட்டியை கீழே தள்ளி கொடூரமாக தாக்கி துணியால் கழுத்தை இறுக்கி  கொடூரமாக கொலை செய்து மூதாட்டி அணிந்திருந்த நகைகளை திருடி சென்றதாகவும் அதனை வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள ஒரு நகை கடையில்  ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அதில் வந்த  பணத்தில் ஆப் மூலம் லோன் கட்டுவதற்காக 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டியதாகவும் முருகன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.அதனைத் தொடர் ந்து அம்பலூர்  காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியம் ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad