ஊராட்சி நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கண் காணிப்பு கேமராக்கள் (CCTV Camera) திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 ஜனவரி, 2026

ஊராட்சி நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கண் காணிப்பு கேமராக்கள் (CCTV Camera) திறப்பு விழா !

 ஊராட்சி நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கண் காணிப்பு கேமராக்கள் (CCTV Camera) திறப்பு விழா !
ராணிப்பேட்டை , ஜன 21-

         இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழாந் துறை ஊராட்சியில் மூன்று திட்டங்களுக் கான திறப்பு விழா, ஊராட்சி மன்ற தலை வர் மின்னல்ஒளி அம்பேத்கராஜ்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடம் மற்றும்புதிய தாக கீழாந்துரை கிராமத்தில் பொறுத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடி வேலு அவர்கள் கலந்துகொண்டு மேற் கண்ட 3 அரசு நலத்திட்டங்களை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழை எளிய மக்கள் 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவி களை ஒன்றிய பெருந்தலைவர் வழங்கி னார். பின்னர் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலைஞர் தாசன், அம்பேத்ராஜ், தயாளன், சுகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு, பெருமாள், கருணாகரன், அருள், ஊராட்சி செயலாளர் தேவேந்திரன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad