குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை பொது மக்கள் கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜனவரி, 2026

குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை பொது மக்கள் கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு !

குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை சீரமைக்க நேரில் சென்று ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் !
காட்பாடி , ஜன 22 -

வேலூர்  மாவட்டம்  காட்பாடி   அடுத்த பரனேஸ்வரம்  பகுதியில்  காட்பாடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 4-ல்  இராட்சாபர் நினைவாலயம், பர்னீஸ் புரம் திருச்சபை சார்பில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக பொது மக்கள் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், D.M.கதிர் ஆனந்த் MP அவர்களிடம் கோரிக்கை வைத்த பொது மக்கள்  கோரிக்கையின் பேரில்இன்று(22.01.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் 
தனது சொந்த செலவில் சாலை மேம் படுத்தி  தருவதாக உறுதி அளித்தார். உடன் வடக்கு பகுதி கழக செயலாளர் ஜி.வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் இரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், திருச்சபை ஆயர் அருட்திரு  S. ரூபஸ் ,திருச்சபை செயலர் - முனைவர். I. ரூபஸ் சதிஷ் குமார், திருச்சபை பொருளாளர் -   K. ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad