ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க 2வது மாநில மாநாடு பாதாகை வெளியீட்டு விழா !
வேலூர் ,ஜன 21-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் இன்று 20.01.2026 வேலூர் ஆசிரியர் இல் லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், தலை மை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜி.விநாயகம், மாவட்ட இணை செயலா ளர் கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.ஆசிரியர் இல்லத்தின் பொதுச்செயலாளர் டி.செல்வமுத்து சங்கத்தின் 2வது மாநில மாநாட்டின் பாதாகைகளை வெளிட்டார் நிர்வாகிகள் பெற்றுக்கொண்ட்னர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
1.கரூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான இரண்டாவது மா நாட்டில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பது என்று தீர் மானம் நிவைறேற்றப்பட்டது.2.மத்திய அரசின் சதித்திட்டங்களை முறி யடித்திட, ஓய்வூதியத்தினை பாதுகாத்திட வாக்கு றுதியை நிறைவேற்றிட கரூரில் நடை பெறும் மாநில மாநாட்டில் அனை வரும் பங்கேற்பது என தீர்மானம் நிறை வேற் றப்பட்டது.3.தேர்தல் அறிக்கையில் தெரி வித்ததை போல ஓய்வு பெற்ற அனைவரு க்கும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதி யர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூ தியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.4.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகையினை பிடித்தம் செய்யும் காலத் தை 15 ஆண்டி லிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
5.80 வயது துவங்கும் போதே கூடுதல் ஓய்வூதியர் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் 6.மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1000 மருத்துவபடி வழங்க வேண்டும்7.மூத்த குடிமக்களுக்கு இரத்து செய்யப் பட்ட இரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.8.அரசு பேருந்துகளில்ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர வேண்டும் 9.மாநிலக்கணக்காயரால் ஓய்வூதியம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு 7மாதங்கள் கடந்த பின்னரும் வேலூர் வெங்கடேஸ் வரா அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி யின் ஓயவுபெற்ற உடற்கல்வி இயக்குநர் நெப்போலியன் அவர்களுக்கு அப் பள்ளியின் தலைமை யாசிரியரால் ஓய்வூ தியம் பெற ஆணை கள் வழங்கப்படாத நிலையினை இக் கூட்டம் கடும் கண்டனங்களை தெரிவிக் கிறது. மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையீடு செய் வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.முடிவில் இணை செயலாளர் கே.சேகர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக