கன்னியாகுமரி, மே 11:
இந்த விழா குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டியின் சார்பில் மே 3 ஆம் தேதி கன்னியாகுமரியில் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பல்கலைக்கழக துணைவேந்தர் நீதிபதி டாக்டர் கே. வெங்கடேசன், முன்னாள் சிறப்பு ஆணையர் கே. சம்பத்குமார், முன்னாள் சிபிஐ சிறப்பு நீதிபதி திருநீல பிரசாத், முன்னாள் காவல்துறை ஐ.ஜி. மாசானமுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக இணை இயக்குநர் டாக்டர் கே. வளர்மதி மற்றும் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பெண் முன்னேற்றம் மற்றும் மாற்று மருத்துவம் போன்ற சமூக சேவைகளில் தனித்திறன் கொண்டவர் சபிலா பானு. இவரின் சாதனையை வெளிநாடுகளில் வசிக்கும் மகபிர் லெப்பை, பாசிலா ராணி, முகைதீன் பீவி, யாசர் அரஃபாத் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் துபாயிலிருந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது பெற்ற இக்கவுரவம், சமூக சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என பெருமிதத்துடன் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக