மூலனூர் அருகே தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மூலனூர் அருகே தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டம்



மூலனூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி ஊராட்சி எரகாம்பட்டி பிரிவு அருகே திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் துரை தமிழரசு தலைமை தாங்கினார். மூலனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பழனிசாமி,பேரூராட்சி தலைவரும்,பேரூர் கழக செயலாளருமான மக்கள் தெண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட பிரதிநிதி் பன்னீர் செல்வம் வரவேற்றார் .கோவை ஒருங்கிணைந்த மாவட்ட கழக வழக்கறிஞர் அணி தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான கனகராசன், தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர்  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினர். அப்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000,கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்தது.நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணம் இல்லா பயணத் திட்டம்.

விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் ஆக இலவச மின்சாரம்.விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆக இலவச மின்சாரம்.அரசுப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்  ஏழை மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கியது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அருந்ததியர் சமூகத்திற்கு உள்றதுக்கீடு 3% வழங்கியது.

தெருநாய்கடியின் காரணமாக உயிரிழக்கும் வெள்ளாடு, ஆடு ஆகியவற்றிற்கு ரூ 6000/- இழப்பீடு வழங்கியது என பல்வேறு திட்டங்களை தந்த அரசு மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என  பேசினார்


இதில் 

தில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் கார்த்தி,கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி,மூலனூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அம்பாள் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் துரைசாமி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, தாராபுரம் ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் அண்ணாதுரை, இந்திராணி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செல்லத்துரை, மீனவரணி தேவராஜ்,பிரதிநிதி ராஜாமணி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் நல்லமுத்து, எரகாம்பட்டி மோகன்ராஜ், குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மூலனூர் மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad