ஆழ்வார்திருநகரி ஜூலை 30. ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலம் இராமாநுஜர் சன்னதியில் ஆளவந்தார் திரு நட்சத்திர திருவிழா நடைபெற்றது.
வைஷ்ணவ வளர்ச்சிக்கு பெறும் முயற்சி எடுத்த இராமானுசரின் ஆசாரியன் ஆளவந்தார். அவர் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஜூலை 25 ந்தேதி தொடங்கி 5 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 10.30 மணிக்கு ஆளவந்தார் அருகில் சீடர் ராமாநுஜர் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். தீபாராதனை. எம்பெருமானார் ஜீயர் துவங்க நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய் மொழி பிள்ளை சடகோபன். சுந்தர்ராஜன். அரவிந்தன். தெய்வச்சிலை. ஆதிநாதன். பாலாஜி.கிருஷ்ண மூர்த்தி. செல்லப்பா. சுதர்சன் .ஆகியோர் சேவித்தனர்.
சாத்து முறை கோஷ்டி பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சன்னதி அர்ச்சகர் கிருஷ்ணன். கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆரியாஸ் விக்ரம் பிரபு ராம்பிரசாத். பேராசிரியர் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக