வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் சாலை விபத்தில் இளைஞர் பலி !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், சித்தாத்தூர் மதுரா, ஐதர்புரம் கிராமத்தில் இன்று 12.08.2026 அன்று பிற்பகல் சுமார் 03.40 மணியளவில், கர்நாடக மாநில பேருந்தும் இருசக்கர வாகனமும் ஒன்றுக் கொன்று மோதிக்கொண்டதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதுமேற்படி விபத்தில் B. தரணி, த/பெ. பாஸ்கரன், (வயது 26), திருமணமாகாதவர், செஞ்சி ராமசாமி தெரு, போஸ்பேட்டை, குடியாத்தம் என்ப வர் TN 23 BM 9325 என்ற பதிவு எண்ணு டைய இருசக்கர வாகனத்தில் சென்றுள் ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து KA 07 F 1723 என்ற பதிவு எண்ணுடைய கர்நாடக மாநில பேருந்தாகும். மேற்படி பேருந்து குடியாத்தம் – KGF வழித்தடத் தில் இயக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. மேற்படி விபத்தில் B. தரணி அவர்கள் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறைக்கும், அவசர ஊர்தி சேவைக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற் கூறாய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக