மதுபோதையில் தாய், தங்கையை அவ தூறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூன், 2026

மதுபோதையில் தாய், தங்கையை அவ தூறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை !

மதுபோதையில் தாய், தங்கையை அவ தூறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை  2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை !
வாணியம்பாடி, ஜூன்.19- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் தாய் மற்றும் தங்கையை அவதூறாக பேசியதாக கூறி நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த இஸ்தியாக் என்ற முன்னா (வயது 24), வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று ஆண்டியப் பனூர் பகுதியில் டீக்கடையில் பணிபுரி யும் தனது நண்பர்களான தாஜூதீன் மற்றும் அமர்சிங் ஆகியோருடன் ஆண்டியப்பனூர் அணைக்கு சென்ற முன்னா, பின்னர் மூவரும் வாணியம்பாடி திரும்பியுள்ளனர். அப்போது மிட்டூர் பகுதியில் மதுபானம் வாங்கிக்கொண்டு மேல்நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள புளியந்தோப்பில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருந்த முன்னா, தாஜூ தீனின் தாய் மற்றும் தங்கையை அவ தூறாக பேசியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த தாஜூதீன், பீர் பாட்டிலை உடைத்து முன்னாவின் வயிறு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் தாஜூதீன் மற்றும் அமர்சிங் ஆகியோர் வாணியம் பாடி சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள தாஜூதீனின் மாமா சபீர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித் துள்ளனர்.
இதனை தொடர்ந்து சபீர் அளித்த தகவ லின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், புளியந் தோப்பில் உயிரிழந்து கிடந்த முன்னா வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், வழக்கு விசாரணையைஆலங் காயம் போலீசார் மேற்கொண்டனர். தொடர்ந்து முன்னாவை கொலை செய்த தாக கூறப்படும் தாஜூதீன் மற்றும் அமர் சிங் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad