குடியாத்தம் கைத்தறி நெசவாளர்களின் நெசவு கூலி உயர்த்தி தர கோரி எம் எல் ஏ விடம் கோரிக்கை மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூன், 2026

குடியாத்தம் கைத்தறி நெசவாளர்களின் நெசவு கூலி உயர்த்தி தர கோரி எம் எல் ஏ விடம் கோரிக்கை மனு !

குடியாத்தம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு கூலி  உயர்த்தி தர கோரி  எம் எல் ஏ விடம் கோரிக்கை மனு !
குடியாத்தம் , ஜூன் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு கூலியாக குறை த்து வழங்கி வருவதை குறித்து மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் என குடியாத் தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து  விசைத்தறி நெசவாளர் சங்க தலைவர் ஆர் அண்ணாமலை அவர்கள் இன்று கோரிக்கை மனு அளித்தார்
இதில் சங்க நிர்வாகிகள் சங்க துணை செயலாளர் பழனி மற்றும் வேலுசாமி பிரபுராஜ். கெங்காதரன் ஆகியோர் முன்னிலையில் மனு வழங்கப்பட்டது
அதில் கடந்த மே மாத முதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பொரை நெசவு கூலி ரூ. 2350-ல் இருந்து. 2000. மாக குறைத்து வழங்குவதை தனியார் லுங்கி உற்பத்தி யாளர்கள் வழங்கி வருகின்றார்கள். 
இது சம்பந்தமாக உதவி இயக்குனர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை வேலூர். விஜயலட்சுமி அவர்களுக்கும்
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் . சுபலட்சுமி ‌குடியாத்தம் அவர்களுக்கும் கடிதம் கொடுத்து. அதன் பின் கடந்த 25 6 2026 அன்று வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் தனியார் லுங்கிய உற்பத் தியாளர்கள் கலந்து கொள்ளாத காரணத் தினால் பேச்சுவார்த்தை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது எனவே சுமுக தேர்வு ஏற்பட ஆவணம் செய்யக்கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad