நெமிலி ஒன்றியம் கடம்பா நல்லூர் கிரா மத்தில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் !
நெமிலி , மே 30 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கடம்பநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் திருக்கோயில் நிர்வாகி களான சீ.அசோக்குமார், மணி, சம்பத் ஆகியோரின் முன்னிலையில், நெமிலி ஒன்றிய கவுன்சிலர் அ.வரலட்சுமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நெமிலி ஒன்றிய சேர்மன் பெ.வடிவேலு மற்றும் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவனி வடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர். மஹா கும்பாபிஷேக விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறைவனின் அருளைப் பெற்றனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றதுடன், பக்தர் களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீ கற்பக விநாயகரின் அருளால் கிராம மக்கள் அனைவரும் வளமும் நலனும் பெற்று வாழ வேண்டுமென பக்தர்கள் பிரார்த் தனை செய்தனர். இவ்விழாவில் கடம்ப நல்லூர், திருமாதலம்பாக்கம், மாங்காட்டு ச்சேரி, முருங்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டனர் .
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம்
இனை ஆசிரியர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக