திருப்பதி அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளை சாவடைந்த இளைஞ ரின் உடல் உறுப்புகள் தானம் !
வேலூர் மாவட்டம் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் சித்தூர் அருகே உள்ள சந்திரகிரியைச் சேர்ந்த ( 22 வயதான) கோதாபட்டி ஹேம்நாத் ரெட்டி ஒரு பட்ட தாரி மருந்தகத்தில் பணிபுரிந்து வருகி றார். , ஜூலை 8 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு திருப்பதி அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். ஜூலை 9 ஆம் தேதி மாலை 4:45 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப் பட்டார்.அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். இதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக் கும், ஒரு சிறுநீரகம் வேலூர் ராணிப்பேட் டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. அவரது தந்தை தன பிரகாஷ் ரெட்டி ஒரு விவசாயி, தாய் முனிலட்சுமி ஒரு இல்லத்தரசி. அவருக்கு ஒரு தங்கை உள்ளார், அவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக