இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜூலை, 2026

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027.

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியும், 

தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு–2027 பணிகள் தமிழ்நாட்டில் திட்டமிட்ட கால அட்டவணையின்படி மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன்படி, 17.07.2026 முதல் 31.07.2026 வரை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே இணையதளத்தின் மூலம் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு (House Listing and Housing Census) பணிகள், கணக்கெடுப்பாளர்கள் வீடு தோறும் நேரில் சென்று மேற்கொள்ளவுள்ளனர்.

சுய கணக்கெடுப்பு வசதி எளிமையான, பாதுகாப்பான மற்றும் விரைவான முறையாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது குடும்ப விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு மாநிலத்தினை தேர்வு செய்து captcha உள்ளீடு செய்து வீட்டு எண் மொபைல் எண், இமெயில் ஐடி ஆகியவற்றினை பதிவு செய்து பிற விபரங்களையும் பதிவு செய்து, பெறப்படும் Self Enumeration Reference Number-ஐ பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் வீடு தோறும் வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கிட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
இம்முறையில் வீட்டிலிருந்தே எளிதாக பதிவு செய்து நேரத்தினை மிச்சப்படுத்தலாம். மற்றும் இது பாதுகாப்பானது மற்றும் இரகசியமானது, ஆவணங்கள் தேவையில்லை. இந்த இணையதளத்தில் உள்நுழைவதற்கு பிரத்யேகமான கியூ ஆர் கோடு உள்ளது. 

இதனை பின்பற்றியும் உள் நுழையலாம். மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) விதிகளின்படி முழுமையான ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும். 

எனவே, பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி உண்மையான தகவல்களை வழங்கி, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
                
மக்கள்தொகை கணக்கெடுப்பு–2027 நாட்டின் திட்டமிடல், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை வடிவமைப்பதற்கான மிக முக்கியமான புள்ளிவிவர அடித்தளமாகும். 

எனவே, தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் ஆர்வமுடன் பங்கேற்று, வீடு தோறும் நடைபெறும் கணக்கெடுப்புப் பணிக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad