வேங்கிக்கால் ஏரிக்கரையில் பனைவிதை நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 நவம்பர், 2026

வேங்கிக்கால் ஏரிக்கரையில் பனைவிதை நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்.


திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் ஏரிக்கரையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அவர்கள் தலைமை தாங்கி, பனைவிதைகளை நேரில் நட்டு விழாவைத் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் பனைவிதை நடும் பணியில், பள்ளிக் கல்வித்துறையினர் மற்றும் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
பனை மரங்களின் சிறப்புகள் குறித்தும், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப்பற்றியும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad