பணப் பிரச்சனை: முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் கட்டட தொழிலாளி காயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 மே, 2025

பணப் பிரச்சனை: முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் கட்டட தொழிலாளி காயம்

 


பணப் பிரச்சனை: முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் கட்டட தொழிலாளி காயம்.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூட கோவில் பாறை குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி முன்னாள் ராணுவ வீரர் இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாராம் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணிகண்டன் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது இந்நிலையில் மாரிச்சாமிக்கும் மணிகண்டனுக்கும் இன்று காலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இருவரும் கைகலப்பான நிலையில் மாரிசாமி கையில் வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து மணிகண்டனை மிரட்டி கொண்டிருந்தார் அப்போது மணிகண்டனின் சகோதரர் உதயகுமார் கட்டட தொழிலாளி இவர் இருவரது சண்டையும் விளக்க சென்றுள்ளார் மாரிசாமி துப்பாக்கியால் சுட்ட போது உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி கொண்டு பாய்ந்தது மேலும் சரமாரியாக மாரிசாமி சுட்டபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் 14 வயது பள்ளி மாணவனும் தோள்பட்டையில் லேசான காயம் அடைந்தார உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு உதயகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பள்ளி மாணவன் லேசான காயத்துடன் தப்பித்தார் இது குறித்து கூட கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசாமி இடம் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் மாரிச்சாமி வைத்திருந்தது சிறிய ரக துப்பாக்கியா அல்லது ஏர்கன் வகையை சேர்ந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad