திருமங்கலத்தில் உடல் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளம் பிரிவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சேதுபதி அவர்களின் மனைவி காயத்ரி வயது 27 ஆகிறது ஒன்றரை வயது ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தவர் மயங்கி விழுந்ததால் ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் (கண்களைத் தவிர) தானம் செய்யப்பட்டது.
நேற்று பள்ளக்காப்பட்டியில் அவரது உடலுக்கு ஆர்டிஓ சிவஜோதி வருவாய் ஆய்வாளர் தனசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக