திருப்பூரில் இருந்து வால்பாறை சென்ற அரசு பேருந்து 33 கொண்டை ஊசியில் வளைவில் நிலை தடுமாறியது ...
இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பூரில் இருந்து வால்பாறை சென்று கொண்டிருந்த அரசு பஸ் 33வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. 60 பயணிகள் பயணித்த நிலையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அதில் ஒருவர் கோவை கங்கா மருத்துவமனையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 25க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுரை கூறினார்.
உடன் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் இரா.நவநீதகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக