விட்டு விட்டு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீரால் பாதிப்பு நோயாளிகள் அவதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 மே, 2025

விட்டு விட்டு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீரால் பாதிப்பு நோயாளிகள் அவதி!


விட்டு விட்டு பெய்த கனமழையால்  அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீரால்  பாதிப்பு நோயாளிகள் அவதி! 

திருப்பத்தூர் ,மே 18

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்த கனமழைக் கே அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் பாதிப்பு ஆக்கிர மிப்புகளை முழுமையாக வருவாய்த் துறையினர் அகற்றாததே இதற்கு காரண மாக உள்ளது தொடர்ந்து ஏழைகளின் குடிசைகள் வீடுகள் மட்டுமே அகற்றி வரும் வருவாய் துறையினர் அதிகளவில் செல்வந்தர்கள் ஆக்கிரமிப்புகளை அகற் றாமல் இன்றுவரை மெத்தனமாக இருந்து வரும் வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருகின்றன.மேலும் கழிவு நீர் கால்வாய்கள் அங்கங்கே தூர்வாரா மலும் முழுமையாக கழிவுநீர் கால்வாய் செல்வதற்கு கால்வாய் வசதிகள் சரி செய்யாததே இதற்கு முழு காரணம் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனியும் காலம் தாழ்த் தாமல் இதுகுறித்து மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 செய்தியாளர்,
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad